தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி
கோவில்பட்டியில் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை, கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், கண்தான இயக்கம் சார்பில் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு பேரணியை டாக்டர் மீனாட்சி தலைமையில் நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி இயந்திரவியல் துறை தலைவர் பரமசிவம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன், ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், கண்தான இயக்க தலைவர் ஜெயராஜ், கண் மருத்துவமனை மேலாளர் ஜோசப் அந்தோணிசாமி, ஒருங்கிணைப்பாளர் சாரதா, என்.எஸ்.எஸ். அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் கல்லூரி மாணவ-மாணவிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பேரணியானது முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்து புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. அங்கு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டாக்டர் ஹரிணி கிருஷ்ணா, நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் சண்முகவேல், முதல்வர் காளிதாச முருகவேல் ஆகியோர் கண்தானம் பற்றி பேசினார்கள்.