தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டி; கலெக்டர் தொடங்கி வைத்தார்


தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டி; கலெக்டர் தொடங்கி வைத்தார்
x

குற்றாலத்தில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தென்காசி

இந்திய வலு தூக்கும் சங்கம் மற்றும் தமிழ்நாடு வலு தூக்கும் சங்கம் சார்பில் குற்றாலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக ஜூனியர், சப் ஜூனியர் பிரிவுக்கான தேசிய வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வலுதூக்கும் சங்க மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமர்சேவா சங்க செயலாளர் சங்கரராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் இந்தியா முழுவதும் 24 மாநிலங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டி வருகிற 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வலுதூக்கும் சங்க பொருளாளர் ரவிக்குமார், நெல்லை மாவட்ட தலைவர் சிவராமலிங்கம், செயலாளர் சண்முகசுந்தரம், மற்றும் நிர்வாகிகள் முருகன், குத்தாலிங்கம், சரவணகுமார், ஜோதி மாணிக்கம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


Next Story