தேசிய கல்வி கொள்கை கருத்தரங்கம்
தேசிய கல்வி கொள்கைக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
சிவகங்கை
சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேசிய கல்வி கொள்கை குறித்து பெற்றோருக்கு விளக்கும் கருத்தரங்கம் முதல்வர் ஜான் தலைமையில் நடைபெற்றது. காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி முதல்வர் உஷா குமாரி, அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். விருதுநகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு பேசியதாவது:- இந்தியாவில் 1253 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14 லட்சம் பேர் படிக்கின்றனர். 450 பள்ளிகளில் பால்வாடி தொடங்கப்பட்டுள்ளது. 228 பள்ளிகளில் மாணவர் திறன் மையம் செயல்படுகிறது. இதன்மூலம் 22 மொழிகள் கற்கும் வாய்ப்பு நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கிறது என்று பேசினார். முடிவில் முதுநிலை ஆசிரியர் செல்வம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story