நந்தன் கால்வாயில் நீர் வரத்து: தண்ணீரில் தீபங்கள் விட்டு விவசாயிகள் வரவேற்பு


நந்தன் கால்வாயில் நீர் வரத்து:    தண்ணீரில் தீபங்கள் விட்டு விவசாயிகள் வரவேற்பு
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நந்தன் கால்வாயில் நீர் வரத்து உள்ளதை அடுத்து தண்ணீரில் தீபங்கள் விட்டு விவசாயிகள் வரவேற்பு அளித்தனா்.

விழுப்புரம்


செஞ்சி,

திருவண்ணாமலை மாவட்டம் கீரனூர் அணைக்கட்டில் இருந்து பனைமலை வரை நந்தன் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்ததால், தண்ணீர் வரத்து இன்றி, இருந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தற்போது அரசு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டதன் அடிப்படையில், தற்போது தண்ணீர் வரத்து தொடங்கி இருக்கிறது. இதனால் இந்த வாய்க்காலை சார்ந்துள்ள விவசாயிகளின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தநிலையில் கார்த்திகை தீப திருவிழாவான நேற்று முன்தினம் மாலையில், நந்தன்கால்வாய் பாதுகாப்பு இயக்கம் சார்பில் செஞ்சி அருகே கணக்கன்குப்பத்தில் வாய்க்காலில் வாழை மட்டையில் தீபம் ஏற்றி அதை தண்ணீரில் விட்டு வரவேற்றனர். இதைபோன்று, 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாய்க்கால் கரையோரம் தீபம் ஏற்றியும் வழிப்பட்டனர்.


Next Story