தேவரியம்பாக்கம் கிராமத்தில் நம்ம ஊரு சூப்பரு தூய்மை திட்ட பணி


தேவரியம்பாக்கம் கிராமத்தில் நம்ம ஊரு சூப்பரு தூய்மை திட்ட பணி
x
தினத்தந்தி 2 Sept 2022 2:17 PM IST (Updated: 2 Sept 2022 2:23 PM IST)
t-max-icont-min-icon

தேவரியம்பாக்கம் கிராமத்தில் நம்ம ஊரு சூப்பரு தூய்மை திட்ட பணியை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம்

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நம்ம ஊரு சூப்பரு எனும் தூய்மை பணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 274 கிராம ஊராட்சிகளிலும் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் கிராமங்கள் முழுவதும் வீதிகள் பள்ளிகள், அரசு கட்டிடங்கள் உள்ள பகுதிகளில் குப்பை கூளங்களை அகற்றும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது.

வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற நம்ம ஊரு சூப்பரு தூய்மை பணி திட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் கலந்து கொண்டு அரசு பள்ளி வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளும் தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். தூய்மை பணி திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த மாவட்ட ஊராட்சி குழு தலைவரிடம் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம், கழிவறை வசதி, சுற்றுச்சுவர் வசதி உள்ளிட்டவைகளை செய்து தருமாறு பள்ளி ஆசிரியர்களும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்தனர். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பொற்கொடி செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார், துணைத்தலைவர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story