நாமக்கல் உழவர்சந்தையில் தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனை


நாமக்கல் உழவர்சந்தையில்  தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனை
x

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனையானது.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனையானது.

உழவர் சந்தை

நாமக்கல்- கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் இங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

அந்த வகையில் நேற்று 22½ டன் காய்கறிகள் மற்றும் 5 டன் பழங்கள் என மொத்தம் சுமார் 27½ டன் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.8 லட்சத்து 78 ஆயிரத்து 630-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 5,080 பேர் வாங்கி சென்றனர்.

விலை விவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று கத்தரிக்காய் கிலோ ரூ.44-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.32-க்கும், புடலங்காய் கிலோ ரூ.30-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.60- க்கும், பீட்ரூட் கிலோ ரூ.52-க்கும், கேரட் கிலோ ரூ.48-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.80-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.26-க்கும், இஞ்சி கிலோ ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்ன வெங்காயம் கிலோ ரூ.20-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.24-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து இருந்ததால், அவற்றின் விலை குறைந்து காணப்பட்டதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் வெளிமார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனையான நிலையில் உழவர் சந்தைக்கு தக்காளி விற்பனைக்கு வரவில்லை. நேற்று குறைந்த அளவில் தக்காளி வந்து இருந்தாலும், அது கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story