நாமக்கல்லில் அதிகபட்சமாக 30 மி.மீட்டர் மழைபதிவு


நாமக்கல்லில் அதிகபட்சமாக 30 மி.மீட்டர் மழைபதிவு
x

நாமக்கல்லில் அதிகபட்சமாக 30 மி.மீட்டர் மழைபதிவு

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் ஆங்காங்கே பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் கடுமையான வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தது. அதிகபட்சமாக நாமக்கல்லில் 30 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு :-

நாமக்கல் -30, பரமத்திவேலூர்-20, கலெக்டர் அலுவலகம்-15, ராசிபுரம்-13, புதுச்சத்திரம்-12, மங்களபுரம்-3. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 93 மி.மீட்டர் ஆகும். இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story