பண்ணையாளர்கள் கோழித்தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என பரிசோதிக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல்


பண்ணையாளர்கள்  கோழித்தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என பரிசோதிக்க வேண்டும்  ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்ணையாளர்கள் கோழித்தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என பரிசோதிக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பண்ணையாளர்கள் கோழித்தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என பரிசோதிக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

வானிலை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இல்லை. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 4 மி.மீட்டரும், 22-ந் தேதி 16 மி.மீட்டரும், 23-ந் தேதி 18 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளையும் மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்திலும், நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசும். இன்றும், நாளையும் வடக்கு திசையில் இருந்தும், நாளை மறுநாள் மற்றும் 22-ந் தேதி வடகிழக்கு திசையில் இருந்தும், 23-ந் தேதி வட மேற்கு திசையில் இருந்தும் காற்று வீசும்.

அதேபோல் வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 62.6 டிகிரியாகவும் இருக்கும். இதனிடையே காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 80, 80, 80, 90, 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 30, 30, 40, 60, 60 சதவீதமாகவும் இருக்கும்.

கனமழைக்கு வாய்ப்பு

சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் பரவலாக லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனிடையே கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் இறக்கை அழுகல் மற்றும் குடல்புண் நோயின் தாக்கத்தால் இறந்தது கோழியினை நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது.

எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என பரிசோதித்துவிட்டு வழங்க வேண்டும். மேலும் தீவனத்தில் பூஞ்சை நச்சுக்களின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க பூஞ்சை நச்சு தடுப்பானை உபயோகிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story