நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் `கியூ-ஆர்' கோடு மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏற்பாடு


நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில்  `கியூ-ஆர் கோடு மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏற்பாடு
x

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் `கியூ-ஆர்' கோடு மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏற்பாடு

நாமக்கல்

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையை செலுத்துவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் 6 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது பக்தர்கள் நேரடியாக கோவில் நிர்வாக வங்கி கணக்கிற்கு காணிக்கையை செலுத்தும் வகையில் கோவில் வளாகத்தில் உள்ள 2 உண்டியல்களில் `கியூ-ஆர்' கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. இதை பக்தர்கள் ஸ்கேன் செய்து நேரடியாக வங்கி பரிவர்த்தனை மூலம் காணிக்கையை கோவிலுக்கு செலுத்த முடியும். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகம் மற்றும் நாமக்கல் தனியார் வங்கியினர் செய்துள்ளனர்.

இதனிடையே நேற்று `கியூ-ஆர்' கோடு மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் தொடக்க நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. உதவி ஆணையர் இளையராஜா தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் மணிமலா முன்னிலை வகித்தார். தனியார் வங்கியின் சேலம் மண்டல மேலாளர் ஜனார்த்தன், நாமக்கல் கிளை மேலாளர் கோபிநாத் மற்றும் வங்கி அதிகாரிகள் `கியூ-ஆர்' கோடு ஸ்டிக்கர்களை கோவில் அதிகாரிகளிடம் வழங்கினர். பின்னர் அந்த ஸ்டிக்கர்கள் உண்டியலில் ஒட்டப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. வருங்காலங்களில் நாமக்கல் நரசிம்மசாமி கோவிலிலும் `கியூ-ஆர்' மூலம் ஸ்கேன் செய்து காணிக்கையை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உதவி ஆணையர் தெரிவித்தார்


Next Story