பேரம்பாக்கத்தில் நல்லாத்தம்மன் கோவில் திருவிழா


பேரம்பாக்கத்தில் நல்லாத்தம்மன் கோவில் திருவிழா
x

பேரம்பாக்கம் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கும் நல்லாத்தம்மன் கோவிலில் நல்லாத்தம்மன் காப்பு கட்டுதல் மற்றும் படையல் திருவிழா 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

திருவள்ளூர்

இந்த நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் நல்லாத்தம்மனை ஊர் எல்லையில் இருந்து கொண்டு வந்து கிராமத்தில் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது.

நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான அம்மனுக்கு படையல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேள வாத்தியங்கள் முழங்க நல்லாத்தம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பேரம்பாக்கம் கிராமத்தில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் நல்லாத்தம்மனுக்கு வீடு தோறும் பக்தர்கள் குவியல் குவியலாக படையல் வைத்து அம்மனுக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த படையல் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. இதனை பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.


Next Story