நக்கசேலம் அரசு பள்ளி மாணவிகள் கலெக்டரிடம் வாழ்த்து


நக்கசேலம் அரசு பள்ளி மாணவிகள் கலெக்டரிடம் வாழ்த்து
x

"நுண்ணறிவு தலைக்கவசத்தை" கண்டுபிடித்ததால் மாநில அளவில் 5-ம் இடம் பிடித்த நக்கசேலம் அரசு பள்ளி மாணவிகள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளி "கலாம்" மாணவர் அணியின் மாணவிகளான யாழினி, சர்மிளா, பூஜா, கங்கா மற்றும் வழிகாட்டி ஆசிரியர் ஓம் பிரகாஷ் ஆகியோர் "நுண்ணறிவு தலைக்கவசத்தை" கண்டுபிடித்ததில் மாநில அளவில் 5-ம் இடம் பெற்று தமிழக முதல்-அமைச்சரிடம் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பெற்றனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களிடம் கலெக்டர் கற்பகம் பேசுகையில், "உங்களது கண்டுபிடிப்பால் முதல்-அமைச்சரிடம் இருந்து விருது பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். அரசு பள்ளி மாணவ-மாணவிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். உங்களின் தொடர் ஆய்வுகளுக்கு பள்ளிக்கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் எப்போதும் துணை நிற்கும், என்றார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர். முன்னதாக கலெக்டர் கற்பகம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட நபர்களுக்கு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் விதம் குறித்த தகவல்கள் மற்றும் முக்கிய பாடங்களின் தொகுப்புகள் அடங்கிய புத்தகங்களை வழங்கினார்.


Next Story