நாகை நவநீத கிருஷ்ணன் கோவில் தேரோட்டம்


நாகை நவநீத கிருஷ்ணன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை நவநீத கிருஷ்ணன் கோவில் தேரோட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாகையில் உள்ள நவநீத கிருஷ்ணன் கோவில் தேரோட்டம் நடந்தது. பெருமாள் வடக்கு வீதியில் இருந்து தேரோட்டம் தொடங்கியது. தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகரசபை தலைவர் மாரிமுத்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர்கள் சண்முகராஜ், தனலட்சுமி ஆகியோர் தேர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ருக்மணி, சத்தியபாமாவுடன் நவநீதகிருஷ்ணர் தேரில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். பெருமாள் கீழவீதி, பெருமாள் தெற்குவீதி, பெருமாள் மேலவீதி வழியாக மீண்டும் தேர் நிலையை வந்தடைந்தது.


Next Story