திருச்சி ரெயில் நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு


திருச்சி ரெயில் நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு
x

திருச்சி ரெயில் நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 1-வது ஏ பிளாட்பாரத்தில் நேற்று மாலை பெட்டி (சூட்கேஸ்) ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதை கண்ட பயணிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீசார் அங்கு சென்று பெட்டியில் ஏதேனும் மர்ம பொருள் இருக்குமோ? என சந்தேகம் அடைந்து, அங்கு அருகே 1-வது பிளாட்பாரத்தில் ரெயிலுக்காக காத்து நின்ற பயணிகளை அப்புறப்படுத்தினர். பின்னர் பெட்டியை எடுத்துதிறந்து பார்த்தனர். அப்போது அந்த பெட்டியில் எதுவுமின்றி காலியாக இருந்தது. இதையடுத்து அந்த பெட்டியை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டியால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story