மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்


மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்
x

நெல்லை அருகே மர்மமான முறையில் மயில் இறந்து கிடந்தது.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் ஒரு ஓட்டல் முன்பு நேற்று மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்றனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில், அருகில் இருந்த மின் வயரில் மின்சாரம் தாக்கி மயில் உயிரிழந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அந்த மயில் அங்குள்ள கட்டிடத்தின் மீது கீழே விழுந்து இறந்ததாகவும் ஒரு தரப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து மயிலின் உடலை பரிசோதனைக்காக வனத்துறையினர் கைப்பற்றி சென்றனர். இதற்கிடையே கொக்கிரகுளம் பஸ்நிறுத்தம் அருகில் மற்றொரு மயில் ஒன்று மர்ம முறையில் அடிபட்டு மயக்க நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்த மயிலையும் வனத்துறையினர் மீட்டுச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு மயில்கள் அடிபட்டதில் ஒரு மயில் பரிதாபமாக உயிரிழந்திருப்பது பறவை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மர்ம நபர்கள் யாரேனும் இந்த 2 மயில்களுக்கும் விஷம் வைத்தார்களா? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story