சேனை ஓடை குப்பையில் தீ வைத்த மர்ம நபர்கள்
கம்பம் சேனை ஓடை குப்பையில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
கம்பம் நகரின் மையப்பகுதியில் சேனை ஓடை செல்கிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஓடை தண்ணீரின் மூலம் விவசாயம் நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது சேனை ஓடை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சுருங்கி விட்டது. மேலும் சேனை ஓடை குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து போக்குவரத்து சிக்னல் வரை உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளில் இருந்து கழிவுகளை சேனை ஓடை பகுதியில் கொட்டி வருகின்றனர். பல முறை நகராட்சி சார்பில் தடுப்பு வேலிகள் அமைத்து வந்தாலும் தடுப்பை உடைத்து குப்பைகளை கொட்டி வந்தனர்.
இந்நிலையில் இந்த குப்பையில் யாரோ மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் நிலைய அலுவலர் ராஜேஸ்வரி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சிறிது நேரம் ேபாராடி தீயை அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.