"என்னுடைய முதல் படமும் வெற்றி...கடைசி படமும் வெற்றி" - உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி


என்னுடைய முதல் படமும் வெற்றி...கடைசி படமும் வெற்றி -  உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 17 Aug 2023 10:42 PM IST (Updated: 17 Aug 2023 10:43 PM IST)
t-max-icont-min-icon

மாமன்னன் 50 நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டதை படக்குழு இன்று கொண்டாடினர்

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஜூன் 29-ந்தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற 'மாமன்னன்' திரைப்படம் கடந்த ஜூலை 27-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியானது. இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் கார் பரிசாக வழங்கப்பட்டது.

இப்படம் வெளியாகி 50 நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டதை படக்குழு இன்று கொண்டாடினர் . இந்த விழாவில் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த விழா மேடையில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

படப்பிடிப்பின் போது எனக்கு அடிபட்டது, அப்போதே படம் வெற்றியாகும் என்று கீர்த்தி சுரேஷ் சொன்னார். என்னுடைய முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி எனக்கு மிகப் பெரிய வெற்றியை தேடி தந்தது. அதேபோல் என்னுடைய இந்த கடைசி படமும் எனக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடி தந்துள்ளது. வடிவேலு இந்த படத்தில் நடிக்கவில்லை என்று இருந்ததால்,இந்த படத்தை ட்ராப் செய்து வேற கதையை எடுக்கலாம் என்று தான் எங்கள் எண்ணம். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story