முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

பிரம்மகுண்டம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனா்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு:

மூங்கில்துறைப்பட்டு அருகே பிரம்மகுண்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த ஓராண்டாக திருப்பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகம் நேற்று தொடங்கியது. இதையொட்டி யாகசாலையில் ஹோமம் மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று காலை யாகசாலையில் இருந்து புனிதநீர் கொண்டு செல்லப்பட்டு, கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story