முத்தாரம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்


முத்தாரம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்
x

முத்தாரம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தில் முத்தாரம்மன் கோவிலில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், அய்யா குடியழைப்பு, அம்மனுக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனை, பாபநாசத்தில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வருதல், உச்சிக்கால பூஜை மற்றும் அம்மனுக்கு மஞ்சள் பால் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை, சப்பர பவனி, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று அதிகாலை சாமக்கொடை நடைபெற்று முக்கிய வீதிகளில் முளைப்பாரியுடன் கும்மிப்பாட்டு பாடி முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story