ஒலக்கூர்முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஒலக்கூர்முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஒலக்கூர் முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

விழுப்புரம்

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஒலக்கூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 24-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக காலையில் முத்தாலம்மனுக்கு மகா அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த முத்தாலம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மதியம் 2 மணியளவில் எழுந்தருளினார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். பின்னர் தேரானது நிலையை வந்தடைந்தது.

விழாவில் ஒலக்கூர் மேற்கு தெரு உபயதாரர்கள் விஜய் டெக்ஸ்டைல்ஸ் ரகுநாதன் செட்டியார், கே.எஸ்.பி. ஜவுளி அண்டு ரெடிமேட்ஸ் உரிமையாளர் தினகரன் செட்டியார், திண்டிவனம் ராம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்கள் தியாகராஜன் செட்டியார், வெங்கடேசன் செட்டியார், புதுச்சேரி ராம் சில்க்ஸ் உரிமையாளர் நடராஜன் செட்டியார், புதுச்சேரி ராம் தங்க நகை மாளிகை உரிமையாளர் ரமணி காந்த் செட்டியார், ஒலக்கூர் பம்பைக்காரர் கொத்தமங்கலம் சிவா மற்றும் குலதெய்வ வழிபாட்டாளர்கள், கிராம பொதுமக்கள், நாட்டாமைக்காரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.


Next Story