முத்தாலம்மன் கோவில் திருவிழா


முத்தாலம்மன் கோவில் திருவிழா
x

செம்பட்டி அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாவிளக்கு எடுத்து பெண்கள் வழிபட்டனர்.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டையில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி இரவில் கரகாட்டம், வாணவேடிக்கையுடன் அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து நடந்த முளைப்பாரி ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

இதேபோல் அக்னி சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் பக்தர்கள் வழிபட்டனர். அதன்பின்னர் இரவில் நாடகம் நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) பக்தர்கள் பல்வேறு வேடம் அணியும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மஞ்சள் நீராட்டு, மாலையில் அம்மன் பூஞ்சோலை சென்றடையும் நிகழ்ச்சி, இரவில் கலைநிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை எஸ்.புதுக்கோட்டை, ராமசாமிபுரம், புதுசுக்குலாபுரம், கிருஷ்ணாபுரம் ஆகிய 4 கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story