முத்தாலம்மன் கோவில் திருவிழா


முத்தாலம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 2 Jun 2023 12:30 AM IST (Updated: 2 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி அருகே அஞ்சுகுளிப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.

திண்டுக்கல்


சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிபட்டியில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. முன்னதாக கடந்த 25-ந் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பொங்கல் வைத்தல், சாமி அலங்கார ஊர்வலம், அக்னிசட்டி, மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி கோவில் முன்பு நேற்று மாலை நடைபெற்றது. இதில் சுமார் 50 அடி உயரம் கொண்ட மரம் கோவில் முன்பு நடப்பட்டிருந்தது. அதில் வழுக்கும் தன்மைக்காக விளக்கு எண்ணெய், சோற்று கற்றாழை ஆகியவை தடவ பட்டிருந்தன. பின்னர் அந்த கழுமரத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏறினர். விழாவில் அஞ்சுகுளிபட்டி, சிறுமலை, மேட்டுக்கடை, எல்லப்பட்டி, சோழகுளத்துப்பட்டி, கன்னியாபுரம், படுகைகாட்டூர், சின்னகாளிபட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். முடிவில் மஞ்சள் நீராடி அம்மன் பூஞ்சோலை செல்லுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது.



Next Story