முத்தாலம்மன் கோவில் திருவிழா


முத்தாலம்மன் கோவில் திருவிழா
x

நத்தம் அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.

திண்டுக்கல்

நத்தம் அருகே உள்ள குட்டுப்பட்டி மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழா, கரந்தமலை தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்புகட்டுதலுடன் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு அம்மன் வானவேடிக்கைகளுடன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. அதன்பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

விழாவில் பால்குடம், அக்னிசட்டி, அங்கப்பிரதட்சணம் மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பக்தர்கள், கிடாய் வெட்டி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்தநிலையில் நேற்று மாலை வர்ண குடைகள், தீவட்டி பரிவாரங்களுடன் பக்தர்கள் புடைசூழ சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story