அரசு திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கஅனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்கண்காணிப்பு அலுவலர் சங்கர் தகவல்
அரசு திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கண்காணிப்பு அலுவலர் சங்கர் கூறினார்.
சேலம்
அரசு திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கண்காணிப்பு அலுவலர் சங்கர் கூறினார்.
வளர்ச்சி திட்டப்பணிகள்
சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண்மை, உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், நான் முதல்வன் திட்டம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் ஆகியவை ஆய்வு நடத்தப்பட்டது. முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 34 பேர் பயனடைந்து வருகின்றனர். இதன் மூலம் 98 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.
ஆய்வு
அதேபோன்று நமக்கு நாமே திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் மூலம் அமைக்கப்பட்டு வரும் கழிப்பறைகள், தனி நபர் இல்ல கழிப்பறைகள் உள்ளிட்ட மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி அரசு திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூடுதல் கலெக்டர் அலர்மேல் மங்கை, உதவி கலெக்டர் சுவாதி ஸ்ரீ, மாநகராட்சி நகர் நல அலுவலர் யோகனந்த் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.