தியாகதுருகத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


தியாகதுருகத்தில்  முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. பிரமுகர்களை கைது செய்ய வலியுறுத்தி தியாகதுருகத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே அனைத்து வட்டார சுன்னத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார ஜமாத் தலைவர் அப்துல் சமது தலைமை தாங்கினார். முத்தவல்லிகள் ரஹீம், சம்சுதீன், சிராஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட பா.ஜ.க.வின் நவீன் ஜிந்தா ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் வட்டார ஜமாத் செயலாளர் சாதிக், துணை முத்தவல்லி நூர் முகமது உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.


Next Story