இந்து கோவில் கும்பாபிஷேகத்திற்கு 14 வகைசீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்...!


இந்து கோவில் கும்பாபிஷேகத்திற்கு 14 வகைசீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்...!
x

கீரமங்கலத்தில் இந்து கோவில் கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் சீர்கொண்டு சென்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள பட்டவைய்யனார் கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து இன்று (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து கீரமங்கலம் மேலக்காடு பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள், பள்ளிவாசலில் இருந்து பழங்கள், காய்கறிகள், தேங்காய், பூ உள்ளிட்ட 14 வகை தட்டுகளை இந்து முறைப்படி கைகளில் ஏந்தியபடி நாட்டிய குதிரைகளின் நடனத்துடன், விண்ணதிரும் பட்டாசுகள் வெடிக்க, இஸ்லாமிய சிறுவர்கள் ஆட்டம் பாட்டமாக முன்னே செல்ல, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பட்டவையனார் கோயிலை வந்தடைந்தனர்.

கோவில் வளாகத்தில் அவர்களுக்கு மாலை அணிவித்து சந்தனம், கற்கண்டு கொடுத்து, ஆரத்தழுவி வரவேற்றனர். தாங்கள் கொண்டு வந்த சீரை பாரம்பரிய முறைப்படி விழாதாரரிடம் இஸ்லாமியர்கள் அளித்தனர்.

இந்து கோவில் கும்பாபிஷேகத்திற்கு முஸ்லிம்கள் சீர்வரிசை கொண்டு சென்ற நிகழ்வு மதநல்லிணக்கத்தை வலுப்படுத்துவதாக இருந்தது.


Next Story