தி.மு.க. கவுன்சிலர் கைது; 5 பேர் கோர்ட்டில் சரண்
திருக்காட்டுப்பள்ளி அருகே அ.தி.மு.க. பிரமுகர் ெவட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். 5 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை சம்பவத்தையொட்டி திருக்காட்டுப்பள்ளி பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
திருக்காட்டுப்பள்ளி,
திருக்காட்டுப்பள்ளி அருகே அ.தி.மு.க. பிரமுகர் ெவட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். 5 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை சம்பவத்தையொட்டி திருக்காட்டுப்பள்ளி பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
அ.தி.மு.க. பிரமுகர்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு(வயது 38). இவர், மைக்கேல்பட்டி பகுதியில் மனைவி சரண்யா மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார்.அ.தி.மு.க. நகர இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும், வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்த பிரபு பிளக்ஸ் அடிக்கும் அச்சகம் நடத்தி வந்தார்.
வெட்டிக்கொலை
கடந்த ஆண்டு தேர்தல் முன்விரோதம் காரணமாக பழமாநேரி சாலை பகுதியில் பாரதிராஜா என்பவர் தாக்கப்பட்டார். இந்த வழக்கில் பிரபு கைது செய்யப்பட்டார் இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் பழமானேரி சாலையில் உள்ள தனது அண்ணன் வீட்டின் அருகில் உள்ள கடையில் பிரபு அமர்ந்து இருந்தார். அப்போது மா்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.
போலீசில் புகார்
இது குறித்து பிரபுவின் மனைவி சரண்யா திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், பழமாநேரி சாலையில் உள்ள பாரதிராஜாவுக்கும், தனது கணவருக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்தது.அந்த பிரச்சினையில் தற்போதைய திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலர் பாஸ்கரன், பாரதிராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும் இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு பிரபுவை பாரதிராஜா, மணிகண்டன், ரமேஷ், மஸ்தாஜி என்கிற நாகராஜ், ஆகியோர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
உடல் தகனம்
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பிரபுவின் உடல் தஞ்ைச அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது குடும்பத்தினர் பிரபுவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.பின்னர் குடமுருட்டி ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் பிரபுவின் உடல் மாலை தகனம் செய்யப்பட்டது.
தி.மு.க. கவுன்சிலர் கைது; 5 பேர் கோர்ட்டில் சரண்
இந்த நிலையில் பிரபு கொலை தொடர்பாக தஞ்சை மாவட்டம் பழமாநேரி சாலை பகுதியை சேர்ந்த பாரதிராஜா(26), மணிகண்டன்(33), ரமேஷ்(42), திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த மஸ்தாஜி என்ற நாகராஜ்(50), நேமம் அக்ரகாரம் சின்னய்யன் ஆகிய 5 பேர் மதுரை இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.மேலும் பிரபு கொலை தொடர்பாக திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பாஸ்கரனை(46) நேற்று மாலை திருக்காட்டுப்பள்ளி போலீசார் கைது செய்து திருவையாறு கோா்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கடைகள் அடைப்பு
ெகாலை செய்யப்பட்ட பிரபுவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் திருக்காட்டுப்பள்ளி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.கொலை செய்யப்பட்ட பிரபு கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கவுன்சிலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.