முப்புடாதி அம்மன் கோவில் தேரோட்டம்
கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. தினமும் கும்பஜெபம், ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம், ஒவ்வொரு சமுதாயம் சார்பில் இரவில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை அம்மன் தேரில் எழுந்தருளுதல், மதியம் கோவில் சன்னதி முன்பிலிருந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இரவில் ஊஞ்சல் தீபாராதனை நடைபெற்றது. கிருஷ்ணாபுரம், மேலக்கடையநல்லூர், மாவடிக்கால், முத்துகிருஷ்ணாபுரம், பண்பொழி, திருமலைகோவில், அச்சன்புதூர், செங்கோட்டை என பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story