முனியப்ப சுவாமி கோவில் திருவிழா


முனியப்ப சுவாமி கோவில் திருவிழா
x

முனியப்ப சுவாமி கோவில் திருவிழா நடந்தது.

கரூர்

நொய்யல்

நொய்யல் அருகே முனிநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சேமங்கி காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.காலை கிடா பூஜை நடந்தது. பகல் 11 மணிக்கு முனியப்பசுவாமி மற்றும் மகாமுனி சுவாமிக்கு சிறப்பு அசைவபூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story