முனியாண்டி கோவில் பொங்கல் விழா


முனியாண்டி கோவில் பொங்கல் விழா
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் முனியாண்டி கோவில் பொங்கல் விழா நடந்தது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் புதுமந்தை தெருவில் அமைந்துள்ள முனியாண்டி கோவில் ஆடி மாத பொங்கல் விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளில் தீர்த்த குடம், பால்குடம் எடுத்தல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை, இரவு 12 மணிக்கு சாம பூஜை ஆகியன நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு முனியாண்டி கோவில் முன்பு பொங்கலிடுதல் நடைபெற்றது. நேற்று மதியம் 12 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறை நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story