முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
முத்துப்பட்டியில் முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி அருகே முத்துப்பட்டி கிராமத்தில் உள்ள கார முனியப்பன் மற்றும் ஓம் சக்தி மாரியம்மன் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் தொடங்கியது. இதையடுத்து யாகசாலை பூஜைகளும், மூல மந்திர பாராயணம், மகாதீபாராதணை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கார முனியப்ப சாமிக்கும், ஸ்ரீ ஓம் சக்திமாரியம்மனுக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர்பொது மக்கள் செய்திருந்தனர்.