முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியாக உயர்வு


முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 20 Oct 2023 1:30 AM IST (Updated: 20 Oct 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியாக உயர்ந்தது.

தேனி

தமிழக - கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் நேற்று 123.75 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 1,884 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story