முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 137.50 அடியாக உயர்வு
ரூல் கர்வ்’ முறைப்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
இடுக்கி,
முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து 'ரூல் கர்வ்' முறைப்படி அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
வி2,வி3,வி4 மதகுகள் வழியாக கேரள பகுதிகளுக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கேரள பகுதிகளான வல்லக்கடவு, பீர்மேடு, சப்பாத்து, ஐயப்பன் கோவில் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை கேரள நீர்வளத்துறை மந்திரி ரோசி அகஸ்டின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
Related Tags :
Next Story