கோவில்பட்டியில் முளைப்பாரி ஊர்வலம்


கோவில்பட்டியில் முளைப்பாரி ஊர்வலம்
x

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்பட்டியில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்பட்டியில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

சக்தி விநாயகர் கோவில்

கோவில்பட்டி புதுகிராமம் இல்லத்து பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சக்தி விநாயகர் கோவிலில் 33 -ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, 10-ம் ஆண்டு வருசாபிஷேக விழா கடந்த 24-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் விநாயகர் பூஜை, மகா சங்கல்பம், புண்யாகவாசனம், தனபூஜை, நவக்கிரக பூஜை, கோமாதா பூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, 301 பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நிகழ்ச்சியும் நடந்தது. இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., சமூக சங்கத் தலைவர் சங்கரன், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பால்குடம் ஊர்வலம்

நேற்று 2-வது நாள் நிகழ்ச்சியாக காலையில் கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்புள்ள விநாயகர் கோவில் முன்பிருந்து பெண்கள், ஆண்கள் முளைப்பாரி, பால்குடம், மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் கோவிலை அடைந்ததும் அங்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு சக்தி விநாயகர் வீதிஉலா வருதல் உள்ளிட்டவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், பத்மாவதி மற்றும் போலீசார் செய்திருந்தனர்.


Next Story