காளியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்


காளியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்
x
தினத்தந்தி 6 Aug 2023 12:30 AM IST (Updated: 6 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி காளியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி வடகால் கண்மாய் கீழ் புறத்தில் அமைந்திருக்கும் காளியம்மன் கோவிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கு அக்னி சட்டி மற்றும் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கேரளா மாநிலம் ஆரியங்காவில் இருந்து தீர்த்தக்குடம் கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 108 சங்காபிஷேகம், மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள், உச்சிக்கால பூஜை நடைபெற்றது.

பின்னர் அக்னி சட்டி மற்றும் முளைப்பாரியை எடுத்து வந்து ஏராளமான பக்தர்கள் சிவகிரி நகரில் ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். இதில் சிவகிரி, விஸ்வநாதப்பேரி, ஆத்துவழி, புளியங்குடி, குவளைக்கண்ணி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் பூசாரி பிரசாத் உள்பட நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.


Next Story