முளைப்பாரி ஊர்வலம்
புதுக்கோட்டை அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி
சாயர்புரம்:
புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிக்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருவனந்தபுரத்தில் உச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி பால்குடம் எடுத்து ஊர்வலம் வருதல், அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சாமக்கொடை, அம்மன் சப்பரத்தில் பவனி வருதல், மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வருதல் மற்றும் திருவிளக்கு பூஜைகள். பட்டிமன்றம், அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் அன்னமகாராஜா தலைமையில் இளைஞர் அணியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story