முளைப்பாரி ஊர்வலம்
குருவிகுளம் அருகே முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
தென்காசி
திருவேங்கடம்:
குருவிகுளம் அருகே உள்ள அத்திப்பட்டி முத்தாலம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முத்தாலம்மன் அத்திப்பட்டி நெசவாளர் காலனியில் இருந்து ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு நடுத்தெருவில் உள்ள சித்தி விநாயகர் கோவில் முன்பாக இருந்த சப்பரத்திற்கு எழுந்தருளினார். பின்னர் அங்கிருந்து நடுத்தெரு, தெற்கு தெரு, வடக்குத்தெரு வழியாக மீண்டும் விநாயகர் கோவிலை வந்தடைந்தது. மறுநாள் அன்னதானம் நடைபெற்றது. பெண்கள் முளைப்பாரியை எடுத்து வந்து சப்பரத்திற்கு முன்பாக வைத்து கும்மி அடித்து வழிபட்டனர். பின்னர் ஊருக்கு கிழக்கே உள்ள கிணற்றில் கொண்டு சென்று முளைப்பாரி கரைக்கப்பட்டது.
இதேபோல் புதுப்பட்டி முத்தாலம்மன் கோவில், ஆவுடையாபுரம் மாரியம்மன் கோவில், கீழத்திருவேங்கடம் காளியம்மன் கோவில்களிலும் ஆடித்திருவிழா நடைபெற்றது.
Related Tags :
Next Story