மகப்பேறு அவசர சிகிச்சை தொடர்பாக சிங்கப்பூர் சர்வதேச குழுமத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்


மகப்பேறு அவசர சிகிச்சை தொடர்பாக சிங்கப்பூர் சர்வதேச குழுமத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
x

மகப்பேறு அவசர சிகிச்சை தொடர்பாக சிங்கப்பூர் சர்வதேச குழுமத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை

சென்னை எழும்பூர் அரசு நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும், சிங்கப்பூர் சர்வதேச குழுமமும் ஒருங்கிணைந்து மகப்பேறு கால அவசர சிகிச்சை சேவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து, பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.

இதில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், சிங்கப்பூர் குடியரசின் கான்சுலேட் ஜெனரல் எட்கர் பாங், சிங்கப்பூர் சர்வதேச குழுமத்தின் இயக்குனர் விஜயா ராவ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், 'தமிழ்நாட்டில் டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் அவசரகால மகப்பேறு சிகிச்சைகள், பச்சிளங்குழந்தைகள் உயிர்பித்தல் திறன்களை மேம்படுத்த இதுபோன்ற சர்வதேச குழுமத்திடம் இணைந்து செயல்படும் திட்டம் பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் கர்ப்பங்கள் பதிவாகிறது. இதில், தாய் மற்றும் சிசு மரண விகிதத்தையும் குறைப்பதற்கு சிங்கப்பூர் டாக்டர்களின் உதவியோடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு பெரிய அளவில் கட்டுக்குள் உள்ளது. கடந்த 1-ந்தேதி நடந்த முகாம் மூலம் 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளார்கள். தமிழ்நாட்டில் இதுவரை 4 ஆயிரத்து 703 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். 420 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்' என்று தெரிவித்தார்.


Next Story