குண்டும், குழியுமான சாலையால் விபத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள்

குண்டும், குழியுமான சாலையால் விபத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள்
x

துவரங்குறிச்சி அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

துவரங்குறிச்சி அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மோசமான சாலை

மணப்பாறையில் இருந்து துவரங்குறிச்சிக்கு செல்லும் பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அதுமட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களின் பிரதான சாலையாகவும் உள்ளது.

இந்தசாலை ஆங்காங்கே சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இந்நிலையில் மணியங்குறிச்சி விளக்கு, கருமலை, காரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள மோசமான சாலையை சீரமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் அதில் எந்தவித கலவையும் இன்றி தார் கூட ஊற்றாமல் உள்ளது.

10 பேர் காயம்

இதனால் அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பஞ்சராவதுடன் அடிக்கடி விபத்தும் நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் இச்சாலையில் 10-க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளனர். எனவே இந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினரிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story