ஓசூரில் கனமழை:ரெயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி


ஓசூரில் கனமழை:ரெயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதலே வானம் மப்பும், மந்தாரமாக காணப்பட்டது. தொடர்ந்து இரவு மழை பெய்யத் தொடங்கியது. இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக, ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியது. இதனால், தண்ணீரில் தத்தளித்தவாறு சென்றன. மேலும் முழங்கால் அளவிற்கு மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளானர். நேற்று காலை அந்த வழியாக வேலைக்கு செல்வோரும், அவசர பணிகள் நிமித்தமாக செல்பவர்களும் செய்வதறியாது திகைத்தனர். இதையடுத்து மழைநீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.


Next Story