மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
சோளிங்கரில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சோளிங்கரை அடுத்த வங்கப்பட்டு கீழ்காலனியை சேர்ந்தவர் ராஜா (வயது 38). இவர் கடந்த 30-ந்் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு மருத்துவமனை அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிகிச்சைக்கு சென்றார். பின்னர் வெளியே வந்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து அவர் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று சோளிங்கர் நகராட்சி பகுதியில் உள்ள பில்லாஞ்சி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை செய்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த கல்மேல் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த யூசப் (40) என்பவரை நிறுத்தி விசாரணை செய்தபோது அவர் சோளிங்கரில் ராஜாவின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.