ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் பலி


ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்;   பெண் பலி
x

வில்லுக்குறி அருகே ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியானார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

வில்லுக்குறி அருகே ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியானார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

விபத்து

வில்லுக்குறி அருகே வெள்ளச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மனைவி ஷைலஜா (வயது 42). இவர் நேற்று முன்தினம் தனது ஸ்கூட்டரில் வில்லுக்குறி சென்று விட்டு வீட்டிற்கு மீண்டும் புறப்பட்டார்.

வெள்ளச்சிவிளையை சென்றடைந்த போது எதிரே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. மோட்டார் சைக்கிளை தக்கலை பகுதியைச் சேர்ந்த செல்சோ என்பவர் ஓட்டினார். இந்தநிலையில் ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து ஷைலஜா தூக்கி வீசப்பட்டார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பெண் சாவு

உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செல்சோ மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story