தக்கலை அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்;கல்லூரி மாணவர் பலி


தக்கலை அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்;கல்லூரி மாணவர் பலி
x

தக்கலை அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக இறந்தார்.

கல்லூரி மாணவர்

தக்கலை அருகே உள்ள முளகுமூடு காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் மோகன் (வயது 52). ஆட்டோ டிரைவரான இவருடைய மகன் ஷெல்ஷன் (22). இவர் டிப்ளமோ படித்து விட்டு இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிக்க கல்லூரியில் சேர்ந்தார்.

இந்தநிலையில் நேற்று காலையில் தன்னுடைய நண்பரான நங்கச்சிவிளையை சேர்ந்த சஜித் மோன் (21) என்பவருடன் மார்த்தாண்டம் சென்று விட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இதில் மோட்டார் சைக்கிளை சஜித்மோன் ஓட்டினார். கல்லுவிளையை தாண்டி முளகுமூடு தபால் நிலையம் அருகே சென்றடைந்த போது எதிரே மார்த்தாண்டம் நோக்கி அரசு பஸ் வந்தது. இந்த பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் நிலைதடுமாறியது.

விபத்தில் பலி

இதனால் மோட்டார் சைக்கிள் சாலையோர கடையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே ஷெல்ஷன் இறந்து விட்டதாக கூறினார்.

அதே சமயத்தில் சஜித் மோன் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் ஷெல்ஷனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அரசு பஸ் டிரைவர் சசி (50) கொடுத்த புகாரின் பேரில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக சஜித் மோன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story