மோட்டார்சைக்கிள் மோதி லாரி டிரைவர் பலி
மோட்டார்சைக்கிள் மோதி லாரி டிரைவர் பலியானார்
ராணிப்பேட்டை
ஆரணி தாலுகா விளைகிராமம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் ஜெகநாதன் (வயது 28). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. ஜெகநாதன் லாரியில் அரிசி பாரம் ஏற்றிச்சென்று அரக்கோணத்தில் இறக்கி விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் லோடுமேன்களாக விக்னேஷ், கோபிநாத் ஆகியோரும் சென்றனர்.
வி.சி.மோட்டூரில் சாப்பிடுவதற்காக லரியை நிறுத்தி விட்டு தன்னுடன் வந்த இரண்டு நபர்களுடன் சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஜெகநாதன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story