மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து 2 பேர் காயம்
நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து 2 பேர் காயம் அடைந்தனர்.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள முதலைகுளத்தை சேர்ந்தவர் ராஜன் என்ற காமராஜ் (வயது 38). இவர் நேற்று மாலை பாணாங்குளம் நான்கு வழிச்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளில் விக்னேஷ் (24) வந்து கொண்டிருந்தார். இருவரது மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதின. இதில் இருவரும் கீழே விழுந்தனர்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் உடைந்து தீப்பற்றி எரிந்தது. இதனால் இருவருக்கும் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்ததும் மூன்றடைப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அந்த வழியாக வந்த வாகனங்கள் சர்வீஸ் ரோட்டில் திருப்பி விடப்பட்டது. இச்சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.