மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு
மானூர் அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீவைக்கப்பட்டது.
திருநெல்வேலி
மானூர்:
மானூர் அருகே உள்ள அளவந்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (வயது 49). இவரது மகள் எலிஸ் மேரி. இவரை அதே ஊரைச் சேர்ந்த அந்தோணி டொமினிக் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு எலிஸ் மேரி தனது தாயார் வீட்டிற்கு வந்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி டொமினிக் தனது மாமியார் வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். பின்னர் அவர்களை கம்பால் அடித்ததுடன் பெட்ரோலை எடுத்து ஊற்றினார். அருகில் இருந்த மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோலை ஊற்றி அதற்கு மட்டும் தீவைத்ததாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து ஆரோக்கியமேரி மானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story