அரசு கல்லூரியில் தாய்மொழி தினம்


அரசு கல்லூரியில் தாய்மொழி தினம்
x

மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் மேள தாளங்களுடன் ஊர்வலமாக கும்பநீரை எடுத்து வந்து தமிழ்த்தாய் சிலைக்கு நல்நீராட்டு செய்தனர். விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை பேராசிரியை சங்கீதா வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் கார்முகிலன் தாய் மொழி தினம் குறித்தும், பாரம்பரியம் குறித்தும் பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், ராமமூர்த்தி, சந்திரசேகரன், பீமாராவ் ராம்ஜி, செந்தில் பிரகாஷ் ஆகியோர் பேசினர். முடிவில் பேராசிரியை சந்திரகுமாரி நன்றி கூறினார். நிகழ்ச்சியை 3-ம் ஆண்டு தமிழ்த்துறை மாணவர் சத்தியபிரியன் ஒருங்கிணைத்து நடத்தினார். விழா ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.


Next Story