கொசுமருந்து அடிக்கும் பணி
வேதாரண்யம் நகராட்சியில் கொசுமருந்து அடிக்கும் பணி நடந்தது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தேங்கி உள்ள மழை நீரில் கொசுகள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தொடர்ந்ந்து வேதாரண்யம் மேலவீதி, வடக்கு விதி, தெற்குவிதி, கிழவீதி, உள்ளிட்ட முக்கிய விதிகளிலும், நகராட்சியில் உள்ள பல்வேறு வார்டுகளிலும் கொசுமருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நகர் மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹீம், ஒவர்சியர் குமரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் வாய்கால் தூர்வாரும் பணியையும் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story