7 கடைகளின் பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் திருட்டு
சீர்காழியில் ஒரே இரவில் 7 கடைகளின் பூட்டை உடைத்து பணம்- பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சீர்காழி;
சீர்காழியில் ஒரே இரவில் 7 கடைகளின் பூட்டை உடைத்து பணம்- பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
7 கடைகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடைவீதியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு கடைவீதியில் கடை வைத்துள்ள நல்லமுத்து(வயது60), ஜீவா(52), பெருமாள்(56), ராகுல்(45) நாராயணன் (60), சேகர் ஆகியோரின் 7 கடைகளின் பூட்டை உடைத்த மா்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்று விட்டனர்.மேலும் கடை வீதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு
இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடந்த பூக்கடை, பழக்கடை மற்றும் பேன்சி பொருட்கள் விற்பனை கடை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதில் ஒரு பழக்கடையில் இருந்து மட்டும் ரூ.70 ஆயிரமும் மற்ற கடைகளில் இருந்து பொருட்கள் மற்றும் பணம் என ெமாத்தம் ரூ.1 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது.இது குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.