பெண் என்ஜினீயரிடம் ரூ.6.15 லட்சம் மோசடி
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி பெண் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.6.15 லட்சம் மோசடி நடந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி பெண் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.6.15 லட்சம் மோசடி நடந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் சாப்ட்வேர் என்ஜினீயர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது33). இவர், பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். அவரது பேஸ்புக்கிற்கு கடந்த மாதம் 13-ந் தேதி ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில் பகுதி நேர வேலையுடன் அதிக அளவில் ஊதியம் என இருந்துள்ளது.
அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண் வாட்ஸ்-அப் மூலம் விவரங்களை மகாலட்சுமி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், சில இணையதள லிங்குகள் மற்றும் விவரங்களை கூறியுள்ளனர். மேலும், பகுதிநேர வேலையுடன் குறைந்த அளவில் பண முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். இந்த பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிடும் என கூறியுள்ளனர்.
பணம் மோசடி
அதை நம்பிய மகாலட்சுமி, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு, ரூ.6 லட்சத்து 15 ஆயிரத்து 900 அனுப்பினார். அதன்பின்னர் அந்த வாட்ஸ்-அப் எண்கள், இணையதள லிங்குகள் அனைத்தும் முடங்கியது. பணம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த மகாலட்சுமி இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.