அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறிதனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.30.83 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை

அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறிதனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.30.83 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
x

பகுதி நேரமாக பணியாற்றி அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.30 லட்சத்து 83 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி

தனியார் நிறுவன ஊழியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கொப்பகரை அருகே கோனேரி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 31). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த 9.5.2023 அன்று இவரது செல்போனில் வாட்ஸ்-அப் செயலிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

இதில் பகுதி நேரமாக பணியாற்றினால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து அதில் இருந்த எண்ணை அவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நடைமுறை செலவுகளுக்காக குறிப்பிட்ட கணக்குகளில் பணம் செலுத்த வேண்டும் என்று மறுமுனையில் பேசிய நபர் தெரிவித்துள்ளார்.

போலீசார் விசாரணை

இதை நம்பி ரமேஷ், அவர் கூறியிருந்த வங்கி கணக்குகளில் ரூ.30 லட்சத்து 83 ஆயிரத்து 298 அனுப்பினார். அந்த பணம் கிடைத்த உடன் எதிர்முனையில் தகவல் அனுப்பிய நபர் தொடர்பை துண்டித்தார். தொடர்ந்து அந்த நபர் பேசிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.

இதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ், இந்த மோசடி குறித்து கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story